புலம்பெயர் தமிழ் அமைப்புகள்பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது.


காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன் நாளில் இலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை நினைத்து மாபெரும் போராட்டம் முன்னெடுக்கபட்ட து.பிரிதானியாவில் Trafalgar Square சதுக்கத்தில் செவ்வாய்கிழமை 30/08/2022 இன்று நான்கு மணி முதல் ஏழு மணி வரை அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைத்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபட்ட து.இப்போராட்டத்தில் பெருந்திரளனோர் கலந்து கொண்டனர்.

Blogger இயக்குவது.