தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்.

சைக்கிள்

ஆச்சரியமா இருக்கா?

ஏனெனில் அவன் கார் வாங்க மாட்டான்.

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்.

வட்டியும் கட்ட மாட்டான்.
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்.

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கும் வர மாட்டான்.

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்லை.

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல.

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் பெரிசா செலவு செய்யறது இல்ல.

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்.

இது மட்டுமா?

இவனுக்கு சுகர் வராது.
இதய நோய் வராது.
குண்டாகவும் மாட்டான்.
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை.

மொத்தத்தில் உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்.

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை, ஒரு பா(B)ர், ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்.

10 இதய டாக்டர்.
10 பல் டாக்டர்.
10 டயட்டீசியன்.

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்.

உடனே முடிவெடுங்கள்;
சைக்கிளா?
காரா?

பொருளாதாரமா???
உங்கள் உடல் நலமா???

NOTE : இவனை விட மோசமானவன் ஒருவன் இருக்கிறான்; அவன் நடந்தே போகிறவன், அவனால் இந்த சைக்கிள் வியாபாரம் கூட நடக்காது.
Blogger இயக்குவது.