கணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)

calamari Fry


கணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்:
 • 3 பெரிய கணவாய்
 • 1 மேசைக்கரண்டி செத்தல் தூள்
 • 1 மேகரண்டி மிளகு தூள்
 • 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது அல்ல)
 • கோதுமை மா தேவையான அளவு
 • உப்புத்தூள் தேவையான அளவு
 • பொரிப்பதற்கு எண்ணை
செய்முறை:
 1. பெரிய கணவாயாக வாங்கி துப்பரவாக்கி கழுவி தலைப்பகுதியையும் இறகு போன்ற பகுதியையும் அகற்றிவிட்டு உடல் பகுதியை வளையங்களாக வெட்டி எடுக்கவும்.
 2. வெட்டிய கணவாய் வளையங்களிற்கு மிளகாய் தூள், மிளகுதூள் உள்ளித்தூள், உப்பு இவை எல்லாவற்றிலும் சிறிது சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் வைக்கவும்.
 3. கோதுமை மாவினுள் எஞ்சிய எல்லாத்தூள்களையும் உப்பையும் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
 4. தூள்கள் கலந்த மாவினுள் கொஞ்சம் கொஞ்சமாக வளையங்களைப் போட்டு வளையத்தின் எல்லாப் பக்கமும் மா ஒட்டக்கூடியதாக பிரட்டி எடுத்து சுடும் எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
 5. எண்ணெயில் பொரியும் கணவாய் வளையங்கள். இரு பக்கமும் திரும்பிப் போட்டு பொரிக்கவும்.
கணவாய் வளையத்தின் உட்புறம் வெளிப்புறம் இரண்டிலும் எல்லா இடமும் மா ஒட்டி இருக்க வேண்டும். ஒரு சிறு இடத்தில் என்றாலும் மா ஒட்டாமல் இருந்தால் எண்ணையில் போட்டுப் பொரிக்கும் பொழுது கணவாய் வெடித்துப் பறக்கும். எண்ணை பறந்து, உடலில் பட்டு காயம் ஏற்படும். ஆனபடியால் நன்றாக மாவில் பிரட்டி எடுத்துப் பொரிக்கவும்.

Blogger இயக்குவது.