முட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)

Dates Cake in Tamilதேவையான பொருட்கள்
1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால்
200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம்
1/2 தேக அப்பச்சோடா
70 மில்லி கொதிக்கும் நீர் (1/2 கப்பிற்கு சிறிது குறைவாக எடுக்கவும்)
115 கிராம் ரவை ( 100கிராம் ரவை + 15 கிராம் மா அல்லது 75 கிராம் ரவை + 40 கிராம் மா என கலந்து பாவிக்கலாம்)
125 கிராம் மாஜரீன் அல்லது பட்டர்
1 தேகரண்டி பேக்கிங் பவுடர்.
15 கிராம் கஜூ
1தேக வனிலா எசன்ஸ்

  1. பேரிச்சம்பழத்தை சிறிதாக வெட்டி 1/2 தேக அப்பச்சோடா, 70 மில்லி கொதிதண்ணீர் சேர்த்து 2 மணிநேரம் ஊறவிடவும்.
  2. ரவையை வறுத்து எடுக்கவும்.
  3. மாஐரீன், ரின்பால் இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  4. பின்பு கொதி நீரில் ஊறிய பேரிச்சம் பழத்தைப் போட்டு அடுக்கவும். அல்லது நன்றாக கலக்கவும்.
  5. பின்பு வறுத்த ரவை, மா, வனிலா, கஜூ இவற்றைச் சேர்த்து கலக்கி தட்டில் இட்டு மேலே சிறிது வெட்டிய கஜூ தூவி 180°cல் 30 நிமிடங்கள் பேக்(Bake) பண்ணி எடுக்கவும்.
  6. கேக் கலவையின் உயரத்தைப் பொறுத்து பேக் பண்ணும் நேரம் மாறும். 30 -45 நிமிடங்கள் தேவைப்படும்.
  7. பேக் பண்ணிய கேக். 3 1/2 cm அளவான உயரத்தில் மென்மையாகக் கிடைக்கும்.
Blogger இயக்குவது.