மன்னாரில் இரு பெண்கள் பரிதாப மரணம்!

Mannar girl


மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


பரப்பான்கண்டல் பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர்.


சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சந்தியோகு டெரன்சி (வயது-25) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


இதையடுத்து, கெப் வண்டியின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிலங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Blogger இயக்குவது.