தமிழ்நாட்டில் 2,00,000 வாகனங்கள் பறிமுதல்!


தமிழ் காவல்த்துறை

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிவோர் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனா். 

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,28,823 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Blogger இயக்குவது.