மலேசியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தர்பார் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி

நடிகர் ரஜி­னிகாந்த் நடித்து பொங்­க­லுக்கு வெளி­யா­க­வுள்ள ‘தர்பார்’ படம் வெளி­யாக ரூ.4.9 கோடி வங்கி உத்­தர­ வாதம் செலுத்­தா­விட்டால் படத்தை வெளி­யிட தடைவிதித்து சென்னை உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. நடிகர் ரஜி­னிகாந்த் மற்றும் நடிகை நயன்­தாரா உள்­ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முரு­கதாஸ் இயக்­கத்தில், லைகா(Lyca) நிறு­வனம் தயா­ரித்­துள்ள ‘தர்பார்’ திரைப்­படம் 10 ஆம் திகதி திரைக்கு வர உள்­ளது. இந்­நி­லையில் இந்தப் படத்­துக்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்வை கிரி­யேசன்ஸ் நிறு­வனம் சார்பில் சென்னை உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­டது.

அந்­நி­று­வனம் தாக்கல் செய்த மனுவில், ‘நடிகர் ரஜி­னி­காந்த் நடித்த ‘2.0’ படத்தைத் தயா­ரித்த லைகா நிறு­வ­னத்­திடம் இருந்து, எங்கள் நிறு­வனம் மலேசிய விநி­யோக உரி­மையை 20 கோடி ரூபாய்க்குப் பெற்­றது. அது­மட்­டு­மல்­லாமல் ‘2.0’ படத்­த­யா­ரிப்­புக்கு 12 கோடி ரூபாயை ஆண்­டுக்கு 30 சத­வீத வட்­டிக்குக் கட­னாக லைகா நிறு­வ­னத்­திற்கு வழங்­கினோம். 

 அந்தத் தொகை தற்­போது வட்­டி­யுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபா­யாக தங்­க­ளுக்கு லைகா நிறு­வனம் வழங்க வேண்டி இருப்­பதால், அந்தத் தொகையை வழங்­காமல் ‘தர்பார் ‘ படத்தை வெளி­யிடத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்­பட்­டுள்­ளது. இந்த வழக்கு நீதி­பதி ஜெய­சந்­திரன் முன் கடந்த 3-ம் திகதி இறுதி விசா­ர­ணைக்கு வந்­தது. 

அப்­போது லைகா நிறு­வனம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்­யப்­பட்­டது. லைகா சார்பில் தாக்கல் செய்­யப்­பட்ட பதில் மனுவில், ”மலேசிய நிறு­வனம் கூறு­வது போல் எந்தக் கடனும் லைகா நிறு­வனம் தரப்பில் தர வேண்­டி­யது இல்லை. மனு­தாரர் உள்­நோக்­கத்­துடன் இந்த வழக்கைத் தொடர்ந்­துள்ளார். மனு­தாரர் கூறிய அனைத்துக் குற்­றச்­சாட்­டு­களும் தவ­றா­னவை. 

மேலும் அற்ப கார­ணங்­க­ளுக்­காக இந்த வழக்கை மனு­தாரர் தொடர்ந்­துள்ளார். மனு­தா­ரர்தான் எங்கள் நிறு­வ­னத்­திற்கு ரூபா 1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும். எனவே, தர்பார் படத்­திற்கு தடை கோரிய மனுவை தள்­ளு­படி செய்ய வேண்டும்” எனத் தெரி­விக்­கப்­பட்­டது. அப்­போது மனு­தாரர் தரப்பில் ஆஜ­ரான வழக்­க­றிஞர்;, ”தங்­க­ளுக்குத் தர­வேண்­டிய தொகைக்குப் பதி­லாக ரஜி­னியின் ‘காலா’ படத்தின் சிங்­கப்பூர் உரி­மையை அளித்­துள்­ள­தாக பதில் மனுவில் தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்­பந்தமும் செய்­ய­வில்லை. 

அவர்கள் கூறும் அனைத்துக் கணக்­கு­களும் தவறு” எனத் தெரி­வித்தார். லைகா நிறு­வனம் தரப்பில் ஆஜ­ரான வழக்­க­றிஞர், எங்கள் நிறு­வனம் பெற்ற கட­னுக்கு ‘காலா’ படத்தின் சிங்­கப்பூர் வெளி­யீட்டு உரிமை அளித்­த­தா­கவும் அதற்­கான ஒப்­பந்தம் தங்­க­ளிடம் உள்­ள­தா­கவும் தெரி­வித்தார். 

  
DARBAR (Tamil) - Official Trailer | Rajinikanth | AR Murugadoss | Anirudh Ravichander | Subaskaran
Blogger இயக்குவது.