ஈரானில் உக்ரைன் விமானம் விபத்து பயணித்த அனைவரும் பலி

Iranஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 737 போயிங் ரக விமானம், 180 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதா அல்லது தாக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Blogger இயக்குவது.