முரசொலி வைத்திருந்தால் தி.மு.க காரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி

துக்ளக்

துக்ளக் இதழின் 50 ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியும் வெளியிடப்பட்டது, பின்னர் விழாவில் பேசிய நடிகர் ரஜினி துணை ஜனாதிபதிக்கு எதைப் பேசவேண்டும் என கட்டுப்பாடு இருக்கிறது எனவும் அவர் இருக்கும் நிகழ்ச்சியில் நமக்கும் அதே கட்டுப்பாடு உள்ளதாகவும், இங்கு அந்த சுதந்திரம் இல்லை என்றும் இதைப் பேச வேண்டுமோ நேரம் வரும் அப்போது பேசுகிறேன் என கூறினார், முரசொலி பத்திரிக்கை வைத்து இருந்தால் அவர்களை திமுக காரன் என்று சொல்லிவிடலாம் முரசொலி பத்திரிக்கை வைத்து இருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம், சோ வை பிரபலமாக்கியது இரண்டு பேர் என்றும் ஒருவர் பக்தவச்சலம் இன்னொருவர் கருணாநிதி என்றார்.


1971 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சீதை. உடை இல்லாமல் செருப்பு மாலை அணிந்து ஊர்வலம் சென்றதாகவும் ஆனால் மற்ற பத்திரிகைகள் அதை வெளியிடவில்லை என்றும் ஆனால் சோ அவர்கள் அச்சடித்து அதை விமர்சித்தார்,அதன் காரணத்தால் அப்போது ஆண்டுகொண்டிருந்த திமுக அரசுக்கு மிகப் பெரிய கெட்ட பேரு வந்ததாகவும், அந்த காலகட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்திருந்த சோ ராமசாமி அகில இந்தியாவுக்கும் தெரிய செய்தது இந்திரா காந்தி எமர்ஜென்சி கால கட்டம் என்றும் கூறினார், சோ போன்ற பத்திரிகையாளர் இப்போது மிக மிக அவசியம் என்றும் காலம் கெட்டுப் போய்விட்டது, அரசியல் கெட்டுப் போய்விட்டது, ஊடகங்களுக்கு மிகப்பெரிய கடமை உள்ளது, இப்போதுள்ள பத்திரிகையோ ஊடகமும் அவர்கள் கட்சி சார்ந்த விஷயங்களை மட்டுமே சொல்வதாகவும் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும் ஆனால் நடுநிலையாக டிவி சேனல்களும் பத்திரிகைகளும் அது உண்மையை அதை மட்டுமே சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.Blogger இயக்குவது.