இந்தோனேசியாவில் வெள்ளம் 23 பேர் பலி!


இந்தோனேசியாவில் தொடர்ந்து நிலவும் மழையுடனான காலநிலையால், தலைநகர் ஜகர்த்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.

1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜகர்த்தாவில் நேற்றைய தினம் பெய்த 377 மில்லிமீற்றர் மழை, ஒரேநாளில் பெய்த அதிகூடிய மழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட நிலையில் தாழ்வான பகுதிகள் யாவும் நீரினால் சூழப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்குஇ மண்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

62,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஜகர்த்தாவின் ரயில், பேரூந்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளதோடு, விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


https://www.youtube.com/watch?v=hVeV02sMF4k

Blogger இயக்குவது.