11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜோக்கர் திரைப்படம்

ஜோக்கர் திரைப்படம்

இந்த வருடம் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது; அதில் ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட எட்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்தபடியாக தி ஐரிஷ் மேன், 1917 மற்றும் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகிய திரைப்படங்கள் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் சிறந்த துணை நடிகர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

92ஆவது அகாடமி விருதுகள் லாஸ் ஏஞ்சலஸில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கர் 2019 2019ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருதை 'போமேனியன் ராப்சோடி' படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை 'தி ஃபேவரைட்' திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை 'ரோமா' திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர். 

'தி ஃபேவரைட்', 'ரோமா' ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்திருந்தது. சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை 'கிரீன் புக்' திரைப்படம் வென்றது. 

அதிகபட்சமாக 'போமேனியன் ராப்சோடி' திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது. குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.

Blogger இயக்குவது.