தேசியரீதியில் பதக்கங்கள் வென்ற மாணவி சடலமாக மீட்பு


வவுனியா கொக்குவெளிப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 19 வயதான யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை இடங்களையும் பெற்றிருந்தார்.

குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாக யுவதியை தேடியுள்ளனர்.

எனினும் யுவதி கண்ணில் தென்படாத நிலையில் சந்தேகம் கொண்ட உறவினர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் நடத்தியபோது யுவதி நீரில் மூழ்கி சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த , சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

குறித்த மாணவி உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


Blogger இயக்குவது.