அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி


ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பரில் சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபி தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 அந்த அமைப்பின் துணை இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவுடனான அல்-கைம் எல்லை நகரத்திற்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபியின் 45 மற்றும் 46வது படைப்பிரிவுகளின் தலைமையகத்தை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஈராக்கிய கூட்டு நடவடிக்கைப் பிரிவின், உடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபியின் 45 வது படைப்பிரிவினை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்காத் தலைமையிலான தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு எதிராக பலமுறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அரசு போராளிகளுக்கு எதிரான போர்களில் ஈராக் படைகளுக்கு ஆதரவாக 5,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் ஈராக் படைகளுக்கு பயிற்சியளித்து ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Blogger இயக்குவது.