அசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர்


திருச்சி: குழந்தை சுஜித்தின் உடலில் அசைவில்லாமல் இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருக்கலாம் என திருச்சி ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த போர்வெல்லில் விழுந்தார்.

அவரை கடந்த 3 தினங்களாக மீட்கும் பணியில் மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். எனினும் அவரை இன்னும் மீட்கமுடியவில்லை. நேற்று வரை குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தன. இன்று அவரது உடலில் அசைவுகள் ஏதும் இல்லை. இதனால் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் சுஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

ரோபோ கேமராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்தோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு கூறுகையில் மாலை 4 மணிக்குள் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நிறைவடையும். குழந்தை சுஜித்தின் உடலில் அசைவில்லாமல் இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருக்கலாம் என தெரிகிறது என்றார்.
Blogger இயக்குவது.