மோடி என்ன செய்தார் தெரியுமா? சீன அதிபர் சந்திப்பில் சுவாரஸ்யம்!


தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் சீன அதிபரை மோடி பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டை அணிந்து வரவேற்ற புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிற்பகல் சென்னைக்கு வருகை தந்தார். விமானநிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய இவர், அங்கிருந்து மாலை 4 மணியளவில், வரலாற்று சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அங்கிருந்த பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி-சட்டையில் சீன அதிபரை கொடுத்து வரவேற்றார்.

வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அங்கு பரதநாட்டியம், கதகளி, போன்ற கலை நிகழ்ச்சிகளை மோடி மற்றும் சீன அதிபர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.மேலும் தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்றாலே சமூகவலைத்தளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் தான் சமூகவலைத்தளங்கள் டிரண்ட் ஆகும், தற்போது கூட கோ பேக் மோடி டிரண்ட் ஆகி வரும் நிலையில், தற்போது மோடி இப்படி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து ஒட்டு மொத்த தமிழர்களின் பார்வையையும் தன் பக்கம் விழ வைத்துள்ளார்.


Powered by Blogger.