போக்குவரத்து விதியை மீறிய எஸ்.பி-யின் வாகனம்; தடுத்து நிறுத்திய காவலர் மீது நடவடிக்கை: தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது மனித உரிமை ஆணையம்

போக்குவரத்து விதியை மீறிச்சென்ற போலீஸ் எஸ்.பி. வாகனத்தை நிறுத்திய காவலர் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தியை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது மாநில மனித உரிமை ஆணையம்.

கடந்த 2 நாட்களுக்கு முன் சத்தியமங்கலம் அதிரடிப்படை எஸ்.பி. மூர்த்தி குடும்பத்துடன் கோவையிலிருந்து, மயிலாடுதுறை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அணைக்கரைப் பாலத்தில் ஒருபக்கம் நிறுத்தி மறுபக்கம் வாகனங்களை வீட்டு வந்ததை மீறி எஸ்.பியின் வாகனம் வடது பாலத்தில் நுழைந்துள்ளார். எஸ்.பி. மூர்த்தியின் வாகனத்தை பாதுகாப்பு பணியிலிருந்த காவலர் நாடிமுத்து மறித்து நிறுத்தியுள்ளார்

இதனால் எஸ்.பிக்கும், காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவலர் நாடிமுத்துவுக்கு எதிராக எஸ்.பி.மூர்த்தி, தஞ்சை எஸ்.பி. செந்தில்குமாரிடம் தொலைப்பேசியில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவலர் நாடிமுத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. செய்தியை அடிப்படையாக கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமக முன் வந்து சூமோட்டோ வழக்காக எடுத்தது. தனது கடமையைச் செய்த காவலர் நாடிமுத்துவை ஆயுதப்படைக்கு மாற்றியதற்கு தஞ்சை சரக டிஐஜி. 4 வாரத்தில் பதிலளிக்க ஆணைய உறுப்பினரான ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.