பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை

Tamil Pizza


துருக்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பீட்சாவில், விநியோகம் செய்த இளைஞர் எச்சில் உமிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஷ்கிஸெகிர் என்ற இடத்தை சேர்ந்த புராக் என்ற இளைஞர் பீட்சா கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா விநியோகிக்கும் முன் அதில் எச்சில் உமிழ்ந்த காட்சி சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து புராக் மீதான வலக்கை விசாரித்த நீதிபதி, அவரின் செயல் மனித தன்மையற்றது என்று கூறி புரோக்கிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சில தினங்களுக்கு முன் அந்த வாடிக்கையாளர் பீட்சா சூடாக இல்லாததால் தனது நண்பரை தீட்டியதாகவும், அதனால் தான் பீட்சா சூடாக இருக்கிறதா என்பதை சோதிக்கத்தான் திறந்து பார்த்ததாகவும் புராக் தெரிவித்தார். பின்னர் அதனை படமெடுத்து தனது நண்பருக்கு அனுப்பியதாகவும், அதில் எச்சில் எதுவும் உமிழவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார். புராக்கின் வாதத்தில் நம்பகத்தன்மை இல்லாததால் அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Blogger இயக்குவது.