வடிவேலு வேண்டாமென கஞ்சா கருப்பை கூப்பிட்டார் ரஜினி!


குழந்தை பிறந்த நேரம், கஞ்சா கருப்பின் தொழில் ஸ்தானத்தில் கரன்ஸி மழைஅடிக்கிறது. குவா குவா சத்தம் கேட்டு ஆனந்தப்படுவதற்குள் ரஜினியிடமிருந்து அழைப்பு வந்ததாம். இவர் நடிக்கும் ரானா படத்தில் காமெடிக்காக கருப்பையே கைகாட்டி விட்டாராம் ரஜினி.

கடைசி நேரத்தில் வந்த இந்த அழைப்புக்கு பின்னால் கடுமையான மண்டை குடைச்சல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். சந்திரமுகி படத்தில் நடிக்கிற நேரம், முதலில் வடிவேலுவின் கால்ஷீட் இருக்கா பாருங்க என்றவர் ரஜினி. அதன்பின் குசேலன் படத்தில் கூட வடிவேலு இருக்கும்படி பார்த்துக் கொண்டார். எந்திரனில்தான் அவர் இல்லை. மற்றபடி வைகை புயலை மேடையில் பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி சுற்று சூழல் மறந்து வெடிச்சிரிப்பு சிரிப்பவர் ரஜினி.

தேர்தல் நேரத்தில் வடிவேலுவின் அணுகுமுறையில் பெரும் அதிருப்தியுற்ற ரஜினி, ரானாவில் அவர் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம். சூட்டிகையில் வடிவேலு அளவுக்கு இல்லை என்றாலும் நிறத்தில் அவரையே மிஞ்சிவிடுகிற கருப்பு உள்ளே நுழைந்தது இப்படிதானாம்.
Blogger இயக்குவது.