சூதாடிய பாககிஸ்தான் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை?


ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்ட பாக்கீஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ரெஸட் கப்ரன் சல்மான் பட்,வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகியோருக்கு ஆயுட் காலத்தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மற்ரொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீருக்கு ஜந்தாண்டு வரை கிரிக்கெட் விளையாடதட தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட் முகமது ஆசிப் மற்றும் முகமது அமீர் ஆகிய மூவரும் இங்கிலாந்துக்கு எதிரான ரெஸ்ட் போட்டியின்போது ”ஸபொட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இங்கிலாந்துப் பத்திரிகை ஆதாரத்துடன் வெளியிட்டது.

அதில் சல்மான் பட்டின் கட்டளைப்படி ஆசிப்பும் அமீரும் வேண்டுமென்றே நோபோல் வீசியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்து பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேவேளை இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்தது,இதனை எதிரத்து அவர்கள் செய்த மேல்முறையீடு தள்ளுபடிசெய்யப்பட்டது.

இன்னிலையில் இங்கிலாந்து பொலிசார் விசாரணை குறித்து இறுதி தகவல்களை வெளியிடவுள்ளனர். அதில் இம் மூவரும் ஸ்பொட் பிக்சிங்கிர் ஈடுபட்டதையும்,எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கிடையே இவர்கள்மீதான ஜ.சி.சி யின் விசாரணை முடிவடைந்துள்ளது இதன் தீர்ப்பு டோகாவில் இன்று வெயியிடப்படவுள்ளது இதில் இவா்களுக்கான தண்டனைகள் வளங்கப்படும்.
Blogger இயக்குவது.