ஒருநாள்த் தொடரிலிருந்து ஷெவாக் விலகினார்இந்திய அணியின் அதிரடி வீரர் ஷெவாக் தற்போது நடைபெற்ருவரும் தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள்த்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்‌கொண்டுள்ள இந்திய அணி ரெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது மூன்று போட்டிகளைக்கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையிலுள்ளன மூன்றாவது போட்டி நாளை 02-01-2011 ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து ஜந்து போட்டிகளைக்கொண்ட ஒருநாள்த்தொடர் ஆரம்பமாகவுள்ளது இத்தொடரிலிருந்து தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷெவாக் விலகியுள்ளார்.

ஷெவாக்கிற்குப்பதிலாக ரோஹித் சர்மா அணிக்பகு அழைக்கப்பட்டுள்ளார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது

17 போ் கொண்ட ஒருநாள்ப் போட்டிக்கான அணியில் தமிழக வீரர் முரளி வஜய் இடம்‌பெற்ருள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.