இலங்கை மைதானங்கள் தயார்நிலையில்
2011 ம் ஆண்டிற்கான உலகக்கிண்ணப் போட்டிகளை இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தவுள்ளன.

உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள உள்ளூர் மைதானங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் முடிவடையும் தறுவாயிலுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபையின் தலைவர் D.S.D சில்வா தெரிவித்துள்ளார்.

மாசி (பெப்ரவரி) மாதம் ஆரம்பமாகவுள்ள இப் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்களை ஜ.சி.சி (ICC) பரிசோதித்து வருகிறது.

இதனிடையே உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக மேற்கிந்தியத்தீவுகள் அணி பங்கேற்கும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.