அமெரிக்காவில் தவறை ஒப்புக்கொண்ண விஜய்!


ஒவ்வொரு படப்பிடிப்பின் முடிவிலும் நடிகர் விஜய் வெளிநாடுகளுக்குச் சுற்ருப்பயணம் செல்வது வளக்கம் அந்தவகையில் தற்போது காவலன் படத்தினை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் விஜய்.

அங்கு சான்பிரான்சிஸ்கோவில் நடந்த காவலன் படத்தின் டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார், அரங்கத்தில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைக்கண்டு மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் மத்தியில்ப் பேசினார் அவர் பேசியது வருமாறு:

உங்களை சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்த ஆதரவை பயன்படுத்திக் கொள்ளாமல் சில வெற்றியடையாத படங்களை கொடுத்து விட்டேன் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

அது நான் செய்த தவறுதான். ஆனால் இப்போது வர இருக்கும் காவலன் படம் நீங்கள் ரசிக்கும்படி இருக்கும் என நினைக்கிறேன். கத்தி, அருவா, துப்பாகி எல்லாத்தையும் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் ஒரு காதல் படத்தின் நடித்திருக்கிறேன் என்று ரசிகர்களிடம் சொன்ன விஜய், அவர்களிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார். நீங்கள் வெளிநாட்டுக்கு கொடுக்கின்ற உழைப்பை, கொஞ்சம் தமிழ் நாட்டுக்கும் கொடுங்களேன் என்று சொன்னார்.
Powered by Blogger.