மத்தியூஸ் மலிங்கவின் இணைப்பாட்ட உதவியுடன் அவுஸ்ரேலிய அணியை வீள்த்தியது இலங்கை அணி


முதலாவது இருபதிற்கு20 வெற்றியைத்தொடர்ந்து இலங்கை அணி இன்று 3 கார்த்திகை 2010 நடைபெற்ற முதலாவது ஒருநாள்ப்போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப்போட்டியின்போது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கவின் அரைச்சதத்தின் உதவியுடனேயே இலங்கை அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏஞ்சலோ மத்தியூஸ் 77 ஓட்டங்களை ஆட்டமிளக்காமல்ப்பெற்றுக்கொண்டார் அணித்தலைவர் குமார் சங்கக்கார 49 ஓட்டங்களைப்பெற்றார்.

அவுஸ்ரேலிய அணியில் எம்.ஈ.கே கசி 71 ஓட்டங்களை ஆட்டமிளக்காமல்ப்பெற்றார் பி.ஜே கேடின் 49 ஓட்டங்களைப்பெற்றார் ஏனைய வீரர்கள் பெரிதாகப்பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணியில் என்.எல்.ரி.சி பெரெரா ஜந்து ஆட்ட இளப்புள்களை ஏற்படுத்தினார் அவுஸ்ரேலிய அணியில் எக்ஸ்.ஜே டேகெர்றி நான்கு ஆட்ட இளப்புள்களை ஏற்படுத்தினார்.

போட்டி முடிவுகள்
அவுஸ்ரேலியா: 239/8 (50 ஓவர்கள்)
இலங்கை: 243/9 (44.2 ஓவர்கள்)
இலங்கை அணி 34 பந்துவீச்சுகள் மீதமிருக்க இலக்கை அடைந்து வெற்றிபெற்றது
Blogger இயக்குவது.