ஜெயம் ரவியின் ரகசிய தோற்றம்


சமீபமாக ஜெயம் ரவி எந்த ஒரு வெளி விழாக்களிலும் தலைகாட்டுவது இல்லை. என்ன தான் சங்கதி என விசாரித்ததில் அந்த தகவல் தேசிய விருது வரைக்குமான விஷயமுன்னு பிறகுதான் தெரிந்தது.பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு அமீர், ஜெயம் ரவியின் நடிப்பில் இயக்குவதாக இருந்தப் படம் ‘ஆதிபகவான்’. ஆனால் சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி படத்தில் நாயகனாக நடிக்கவிருந்ததால் இந்தப் படம் இயக்குவதை தாமதப்படுத்தினார் அமீர். அதனால் ஜெயம் ரவியும் ’பேராண்மை’யில் நடிக்க சென்றுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தில்லாலங்கடி படமும் முடித்துவிட்ட நிலையில் தற்போது அமீரின் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரவி.இதில் ஜெயம் ரவி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பால்வடியும் தனது முகத்தின் கெட்டப்ப மாத்தி, படத்துக்கு ஏற்றாற்போல் தனது செட்டப்பையும் மற்றிக் கொண்டுள்ளாராம் ரவி. இந்த மாற்றங்களுக்காகவே அவர் வெளியில் தலைகாட்டுவதில்லையாம்.
இதே மாதிரிதான் ஆர்யாவும் ‘நான் கடவுள்’ படத்தில் நடித்தபோது இருந்தார். இப்பொழுதும்கூட அவன்-இவன் படத்தில் நடித்து வருவதால் தொப்பி அணிந்துதான் வெளியில் வருகிறார்.
பருத்திவீரனில் கார்த்தி தாடியுடன் அழுக்கா, அதே நேரம் கம்பீரமான கிராமத்து அழகனாய் நடித்திருப்பார். அந்தப் படத்தின் மூலம் கார்த்திக்கு தேசியவிருதையும் தாண்டிய புகழ் கிடைத்தது.
அதேபோன்ற ஒரு மாறுபட்ட, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. நிச்சயம் தேசிய விருதுக்கான முயற்சியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ‘ஆதிபகவான்
Blogger இயக்குவது.