ரஜினி மகள் கல்யாணத்துக்கு வரும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்


சவுந்தர்யா ரஜினிகாந்த்-அஸ்வின் திருமணம் செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதனையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும், அமிதாப், மம்முட்டி, சிரஞ்சீவி உட்பட அனைத்து மாநிலங்களின் சூப்பர் ஸ்டார்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

இதையும் தாண்டி புதிய வரவாக ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ரிச்சர்ட் கிரே-வுக்கும் தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் வீட்டின் கடைசி கல்யாணம் என்பதால், தானே முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வருகிறாராம் ரஜினி.
Blogger இயக்குவது.