மாலை நேரத்து மயக்கத்தில் ஆன்ட்ரியா

ஒருவழியாக மாலை நேரத்து மயக்கம் படத்தின் கதாநாயகி ஆன்ட்ரியா என்பது உறுதியாகிவிட்டது.
ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கின் போது இயக்குநர் செல்வராகவன், நாயகி ஆண்ட்ரியா இடையே காதல் மலர்ந்ததாக கிசு கிசு பரவியது.

செல்வராகவனை பிரிந்த அவரது முன்னாள் மனைவி சோனியா அகர்வாலிடம் ஆண்ட்ரியா பற்றி கேட்ட போது, அவரைப் பற்றியும், அவரின் காதல் பற்றியும் எனக்கு கவலை இல்லை. அதைப் பற்றி எனக்கு பேச நேரம் இல்லை என கூறினார்.

இதற்கிடையை ஆயிரத்தில் ஒருவன் ரிலீசுக்குப் பின் செல்வராகவன் - ஆண்ட்ரியா இடையே மோதல் வெடித்தது. இதற்கு படத்தில் ரீமாசென்னுக்கு முக்கியத்துவம் அளித்ததும் காரணம் என கூறப்பட்டது.

எனது காட்சிகளை செல்வராகவன் குறைத்து விட்டார் என ஆண்ட்ரியா புகார் கூறினார். இதையடுத்து ஆண்ட்ரியாவை சமாதானப்படுத்த தனது சொந்த படத்தில் சோலோ ஹீரோயினாக அவரை செல்வராகவன் ஒப்பந்தம் செய்து விட்டார் எனவும் பேசப்பட்டது.

அந்தப் படம் மாலை நேத்து மயக்கம். ஆனால் அந்த படத்தை தொடங்கும் முன்பே நிறுத்தப்பட்டது. காரணம், வேறு ஒரு கம்பெனிக்கு பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க அவர் ஒப்பந்தமாகி விட்டார். அதில் ஆண்ட்ரியா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியை செல்வராகவன் தேர்வு செய்தார். அப்படத்தின் ஒரு ஷெட்யூல் முடிந்து விட்டது. இதற்கிடையே தெலுங்கில் ராணா நடிக்கும் படத்தை இயக்க செல்வராகவன் ஒப்பந்தமானார். அதில் நடிக்க பல சென்னை மாடல்களை தேர்வு செய்தார். பெரிய பட்ஜெட் காரணமாக அந்தப் படமும் கைவிடப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு இடையே தனது கால்ஷீட்டை வீணடித்ததால் செல்வராகவன் மீது ஆண்ட்ரியா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது மீண்டும் மாலை நேரத்து மயக்கம் ஷூட்டிங்கை தொடங்கி விட்டார் செல்வராகவன்.

ஏற்கனவே சுவாதியின் கால்ஷீட் இருப்பதால் அவரை ஹீரோயினாக நடிக்க வைப்பார் என தகவல் பரவியது. இதனால் யார் ஹீரோயின் என சஸ்பென்ஸ் நிலவியது.

இந்நிலையில் கடந்த வாரம் மாலை நேரத்து மயக்கம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஷூட்டிங்கில் தனுஷூடன் ஆண்ட்ரியா பங்கேற்றார். இதையடுத்து செல்வராகவன் படத்தில் இருந்த ஹீரோயின் சஸ்பென்ஸ் ஒருவழியாக அடங்கியது.
Blogger இயக்குவது.