நயன்தாராவை விட்டு திரிஷாவை பிடித்த பிரபுதேவா

பிரபுதேவா இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நயன் தாராவை தவிர்த்து திரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழில் இச் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா.

இந்தப் படம் முடிந்ததும் தமிழில் அவர் வேறு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்னைகளில் தமிழில் அவர் படம் இயக்குவது ஒத்திப் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கில் அவரைப் படம் இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பிரபுதேவாவும் ஒப்புக்கொண்டாராம். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயி்ன் நயன்தாரா இல்லை. மாறாக திரிஷாவாம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.


இதனிடையே பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை விட்டுக் கொடுக்கப் போகிறார் நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் ஷூட்டிங்குக்காக சென்னை வந்து போன நயன்தாராவை, தி.நகர் ஜவுளிக் கடை, ஆடி தள்ளுபடி விளம்பரத்துக்காக பேசி பார்த்திருக்கிறது. இதற்கு நயன்தாராவும் ஓகே சொல்லிவிட்டதாக தெரியவந்துள்ளது.
Blogger இயக்குவது.