'இச்'சுக்கு பிறகு விஷால்-பிரபுதேவா இணைகிறார்கள்


அவன் இவன் படத்தில் தனது கேரக்டர் என்ன என்பதை மீடியாக்கள் வெளியிட்டதால் சற்றே வருத்தத்தில் இருக்கிறார் விஷால். பெரிய
கோட்டை சின்னதாக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு பக்கத்திலேயை அதைவிட பெரிதாக ஒரு கோடு போட வேண்டும் என்பான் புத்திசாலி. விஷாலுக்கு இது புரியாதா என்ன? தனது அடுத்த படத்திற்கும் அடுத்த படத்தை பற்றிய செய்தியை லேசாக கசிய விட்டிருக்கிறார்.
அவன் இவன் படத்திற்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஷால் என்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இப்படத்திற்கு பிறகு விஷால் கைகோர்க்கவிருப்பது யாருடன் தெரியுமா? நயன்தாரா மணாளன் பிரபுதேவாவுடன்! இந்தியில் ஒரு படத்தை இயக்கி அதையும் வெற்றிப்படமாக்கிய பிரபுதேவா தொடர்ந்து பாலிவுட்டில்தான் மையம் கொள்வார் என்று யூகித்தவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். ஏனென்றால், இச் படத்தை முடித்ததுமே விஷால் படத்தைதான் கையில் எடுக்கப் போகிறாராம் பிரபுதேவா.
இந்த படத்தை தாமே தயாரிக்கிற முடிவிலிருக்கும் விஷால் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் புராஜக்டை மாற்றிவிடும் எண்ணத்திலும் இருக்கிறார் என்கிறது சில அடிஷனல் வம்பளப்புகள்!
Blogger இயக்குவது.