மூன்று முட்டாள்களின் நாயகியளும் தயார் விஜயின் பிடிவாதம்!


ஒரு வழியாக மூன்று முட்டாள்களுக்கான காதாநாயகியை கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்! ஷங்கரின் நோக்கம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளுக்கும் ஒரே கதாநாயகியை பயன்படுத்துவது. இதனால் முதலில் ஷங்கர் பரிசீலித்தது காஜல் அகர்வாலை

ஆனால் காஜல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் விஜய். வேலாயுதம் படத்துக்கு அழைத்தபோது மறுத்து விட்டார். அவர் வேண்டாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார் என்று ஷங்கர் கேட்க, இல்லை காஜல் தவிர நீங்கள் யாரைத் தேர்வு செய்தாலும் எனக்கு ஒகே என்று விஜய் முதலில் ஒதுங்கிக் கொள்ள, ஷங்கர் தனது உதவி இயக்குனரை ஒருவரை விஜயிடம் அனுப்பியிருக்கிறார்.
லாப் டப்புடன் விஜயை சந்தித்த உதவியாளர், ஜெனிலியா, காஜல் அகர்வால், இலியானா ஆகிய நாயகிகளோடு விஜயின் 3டி அனிமேட்டட் டிசைன்களை விஜயிடம் காட்டி, “டைரக்டர் நீங்கள் என்ன ஃபீல் பண்ணுகிறீர்கள் என்பதை அறிந்து வரச்சொன்னார்” என்று சொல்ல விஜய் டிக் அடித்தது இலியானாவை.

இப்போது இலியானா விக்ரமுடன் வெடி, விஜயுடன் 3 இடியட்ஸ் என்று இரண்டு படங்களில் கமிட் ஆகிவிட்டார். கேடி என்ற தோல்விப்படத்தில் வந்துபோன இலியானா தமிழில் ஷங்கர் படத்தின் மூலம் ரீ எண்டரி ஆவது குறித்து ஹாட்டாகப் பேசிகொள்கிறது கோலிவுட்.

விஜயுடன் ஏற்கனவே போக்கிரி படத்துக்கு அழைக்கப்பட்ட இலியானா இப்போது மூன்று முட்டாள் களில் மீண்டும் விஜயிடம் வந்து சேர்ந்திருகிறார். தெலுங்கு போக்கிரியிலும் மகேஷ் பாபுவுக்கு இலிதான் ஜோடி. இப்போது தெலுங்கு இடியட்டிலும் மகேஷ் பாபுவுக்கு இலிதான் ஜோடி. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா
Blogger இயக்குவது.