முத்தையா முரளிதரன் பெயரில் சர்வதேச விளையாட்டு மைதானம்!


இலங்கை, கண்டி மாவட்டத்தின் பலகெல்ல பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கிறிக்கெற் விளையாட்டு மைதானத்துக்கு "முத்தையா முரளிதரன் சர்வதேச விளையாட்டு அரங்கு" என்று புதிய பெயர் சூட்டப்பட உள்ளது.


சர்வதேச டெஸ்ட் கிறிக்கெற் போட்டிகளில் 800 வீரர்களை மண் கவ்வ வைத்து அதிகூடிய விக்கற்றுக்களைக் கைப்பற்றியிருக்கும் உலக சாதனையாளர் முத்தையா முரளிதரனைக் கௌரவிக்கும் வகையில் இதற்கான தீர்மானத்தை ஏக மனதாக மத்திய மாகாண சபை எடுத்துள்ளது.


மத்திய மாகாண ஆளுநர் திக்கிரி கொப்பேகடுவ இந்த யோசனையை சபைக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்திருந்தார். இலங்கையின் உலகப் புகழ் பூத்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனின் சொந்த இடம் கண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் இந்த கிறிக்கெற் விளையாட்டு மைதானத்திலும் உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெற உள்ளன
Blogger இயக்குவது.