‘களவாணி’யை வாங்கிய கெளதம் மேனன்

இயக்குநர் கெளதம் மேனன் தனது நண்பர் மதனுடன் இணைந்து தொடங்கியிருக்கும் போட்டான் பேக்டரி நிறுவனம், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் களவாணி திரைப்படத்தின் அகில இந்திய ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது.

சற்குணம் இயக்கத்தில் பசங்க புகழ் விமல், ஓவயா, இளவரசன், சரண்யா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் களவாணி.

இப்படத்தை தற்போது கெளதம் மேனன், மதன் ஆகியோரின் போட்டான் பேக்டரி அகில இந்திய ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது.

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பச்சைக்கிளிமுத்துச்சரம், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் கெளதம் மேனன்.

களவாணி படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமை இதன் மூலம் மேனன் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.

தற்போது கெளதம் மேனன் நிறுவனம் சார்பில் வெப்பம், நடுநிசி நாய்கள் என இரு படங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.