பில்லா -2: அஜித் – விஷ்ணுவர்த்தன் கூட்டணியில்


இது கொஞ்சம் புதுசுதான். ரீமேக் செய்யப்பட்ட ஒரு படத்தை இரண்டாம் பாகம் எடுப்பது என்பது புதுசுதான்.
‘பில்லா’. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த படம் இது. அந்த காலத்திலேயே பல லட்சம் லாபம் ஈட்டிக்கொடுத்தது படம். அதில் வரும் ‘வெத்தலைய போட்டேண்டி புத்தி கொஞ்சம் மாறுதடி புத்தி கொஞ்சம் மாறயல சுதி கொஞ்சம் ஏறுதடி.....’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பாப்புலரானது.
இப்படத்தை மூன்று வருடங்களுக்கு முன் ரீமேக் செய்தது ஐங்கரன் நிறுவனம். அஜித் இரட்டை வேடங்களிலும் பிரபு போலீஸ் அதிகாரியாகவும், அஜித் ஜோடியாக நயன்தாரா –நமீதா நடித்திருந்தனர். விஷ்ணுவர்த்தன் இயக்கியிருந்தார். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பில்லா லாபத்தையே தந்தான்.
இப்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலை நடந்துவருகிறது. இரண்டாம் பாகத்திலும் அஜித், விஷ்ணு கூட்டணியே இணைகிறது. திரைக்கதையை விஷ்ணுவர்த்தன் எழுதி முடித்துவிட்டாராம். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகவுள்ளது என்றாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Blogger இயக்குவது.