ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மேடை சரிந்ததால் ரத்து..

டெட்ரோய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் சிறு காயங்களுடன் தப்பினர்.

ஜெய்ஹோ உலக இசைப் பயணம் எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் ரஹ்மான். இதுவரை நியூயார்க், அட்லாண்டிக் சிட்டி, சிகாகோ நகரங்களில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

அடுத்து டெட்ரோய்ட் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன. தி போன்டியாக் சில்வர்டோம் என்ற அரங்கில் இதற்காக பிரமாண்ட செட்கள், மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. மேடையில் ரஹ்மானின் இசைக் குழுவினர் இருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த மேடை மொத்தமாக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரஹ்மான் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது: “டெட்ரோய்ட் நகரில் இசை நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இங்கு அமைக்கப்பட்டு வந்த பிரமாண்ட மேடை சரிந்துவிட்டது. கடவுள் அருளால் எனது குழுவினர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர். மேடை அமைப்புப் பணியில் ஈடுபட்ட டெட்ராய்ட் நகர தொழிலாளர்களுக்கும் பெரிய காயம் ஒன்றும் நேரவில்லை.

இதன் காரணமாக டெட்ரோய்ட், டொரண்டோ நகரங்களில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதை விரைவில் தெரிவிக்கிறேன். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி…” என்று கூறியுள்ளார்.
டெட்ரோய்ட்டில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை சரிந்ததால் நிகழ்ச்சி
Blogger இயக்குவது.