ர‌ஜினியுடன் நேரடியாக மோதும் விஜய்


ஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மேடையிலேயே அறிவித்தார்.

இதெல்லாம் பழங்கதை. விஜய்யின் ரூட் ர‌ஜினியிடமிருந்து எம்‌ஜிஆருக்கு மாறிவிட்டது. ர‌ஜினியும் அ‌‌ஜீத் பக்கம் தாவிவிட்டார். இந்நிலையில் இன்டஸ்ட்‌ரியை ஹீட்டாக்கும் செய்தி ஒன்று கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. ர‌ஜினி, விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்ற என்பதுதான் அந்த செய்தி.

எந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று ர‌ஜினி தெ‌ரிவித்துள்ளார். அதே ஆகஸ்ட் மாதம் விஜய்யின் 51வது படம் காவல்காரனும் திரைக்கு வருகிறதாம்.

காவல்காரன் மலையாளத்தில் வெளியான பாடிகா‌ர்ட் படத்தின் ‌ரீமேக். அந்தப் படத்தை இயக்கிய சித்திக்கே இந்தப் படத்தையும் இயக்குகிறார். மலையாளத்தில் முப்பது நாட்களில் படத்தை எடுத்து முடிக்கும் பழக்கமுள்ள சித்திக் அதே வேகத்தில் காவல்காரனை இயக்கி வருகிறார். அனேகமாக படம் ஆகஸ்டில் திரைக்கு வந்துவிடும்.

விஜய்க்கு தன்னம்பிக்கை அதிகம் என்றாலும் எந்திரனுடன் மோதும் அளவுக்கு இருக்குமா என்பதே அனைவ‌‌ரின் கேள்வி.
Blogger இயக்குவது.