கப்பலில் கமல், த்ரிஷா ரொமான்ஸ்

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘மன்மதன் அம்பு'. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்
கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. 'ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். 90 சதவிகிதம் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள்ல நடக்குது. இது திணிப்பு இல்ல, கதை அப்படி. காமெடியும், ரொமான்சும் 50&50 சதவீதம் இருக்கும். பிரமாண்ட கப்பல்ல 15 நாள் படம் பிடிக்கிறோம். படத்துக்காக கமல் ஒத்திகை நடத்தியிருக்கார். 90 பேர் யூனிட். 45 நாள் வெளிநாட்டுல தங்கியிருந்து படத்தை முடிச்சிட்டு திரும்புறோம். நானும் கமலும் இணையும் 5வது படம் இது' என்றார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
Blogger இயக்குவது.