காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தீம் சாங் கம்போஸ் செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தீம் சாங் கம்போஸ் செய்யவும், அதனை விளையாட்டுப் போட்டியின் தொடக்க நாளில் பாடவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தமுறை இந்த விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்கென்அறே பிரத்யேக தீம் சாங் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்கிறார்.

இந்தப் பாடல் விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு சில நாட்கள் முன்பு வெளியிடப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான சேர்மன் சுரேஷ் கல்மாடி தெ‌ரிவித்தார்.

ரஹ்மான் இந்தப் பாடலை பாடும் போது ஸ்டேடியத்திலுள்ள அனைவரும் இணைந்துப் பாடுவதற்கு வசதியாக பாடல் சில நாட்கள் முன்பு வெளியிடப்படும் என்று அவர் தெ‌ரிவித்தார்.
Blogger இயக்குவது.