உலகம் முழுவதும் உள்ள 16 நகரங்களில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நடத்தவுள்ள இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்லெம்டாக் மில்லியனர் திரைப்படம் மூலம் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்ற ஏ.ஆர்.ரகுமான் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். முதல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை பார்வையிட்ட ஏ.ஆர்.ரகுமான், தனது நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரம், ஆன்மீகம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்றார்.

ஏ.ஆர். ரகுமானின் ஜெய்கோ இசை நிகழ்ச்சி ஜூன் 15ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கி உலகின் 16 நகரங்களில் நடைபெற உள்ளன.

நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பாரிஸ், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.
Blogger இயக்குவது.