அப்பாவுடன் இரண்டு மகன்மார் நடனம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம். இவர், ராஜூசுந்தரம்-பிரபுதேவாவின் அப்பா. இதுவரை திரைக்கு பின்னால் மட்டும் இயங்கி வந்த இவர், முதல்முறையாக ஒரு படத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அந்த படத்தின் பெயர், `பா ர பழனிச்சாமி.' ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி, ரவுடிகளை களை எடுப்பதுதான் இந்த படத்தின் கதை. இதில், காதல் ஜோடிகளாக ஸ்ரீனிவாஸ்-மீனாட்சி கைலாஷ் நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்காக சமீபத்தில், ``நேற்று அது உனக்கு...இன்று அது எனக்கு...நாளை அது யாருக்கு தெரியுமா?'' என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் டான்ஸ்மாஸ்டர் சுந்தரத்துடன் அவரது மகன்கள் ராஜூசுந்தரமும், பிரபுதேவாவும் இணைந்து நடனம் ஆடினார்கள்.
படப்பிடிப்பு தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தங்கம் ரியல் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்து, டைரக்டு செய்கிறார் பி.தங்கவேல்.
Blogger இயக்குவது.