கார் பந்தய விபத்து… உயிர் தப்பினார் அஜீத்!

மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கிய அஜீத், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் பார்முலா 2 கார் பந்தயம் நடந்து வருகிறது. தமிழ் நடிகர் அஜீத் குமார் இதில் பங்கேற்கிறார். இதற்கான பயிற்சிப் போட்டிகள் ஞாயிற்றுக் கிழமை நடந்தன.
கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்தது.
மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.
நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் 13 வது இடம் பிடித்தார் அஜீத்.
இதற்கிடையே, இந்தப் போட்டி முடிந்த பிறகுகூட அஜீத் சென்னை திரும்பப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் 4 கார் பந்தயங்களில் பங்கேற்கிறார் அஜீத்.
இதுகுறித்து அஜீத்தின் பிஆர்ஓ விகே சுந்தர் கூறுகையில், ‘அஜீத் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து இந்தப் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அந்த விளையாட்டை அந்த அளவு அவர் நேசிக்கிறார். அவர் விருப்பப்படி விளையாடிவிட்டு, ஓரிரு மாதங்களில் திரும்பவிருக்கிறார். பின்னர் தொடர்ந்து சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்கிறார். இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு வரவிருக்கின்றன” என்றார்.
அஜீத் பங்கேற்ற பயிற்சிப் போட்டியில் நடந்த விபத்து குறித்த வீடியோ:

Blogger இயக்குவது.