விஜய்யின் 50வது படம் 600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்

வரும் ஏப்ரல் 30-ம் தேதி ரிலீசாகிறது விஜய்யின் 50வது படமான, சன் பிக்ஸர்ஸின் சுறா.
விஜய் பட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 600 திரையரங்குகளில் உலகம் முழுக்க இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

சென்னை நகருக்குள் மட்டும் 16 திரைகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த விஜய் படமும் சென்னையில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்கிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.

பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்களே இல்லை என்பதாலும் குறைந்தது இரு வாரங்கள் ஓபனிங் நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.

இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாருடன் மீண்டும் பணிபுரிய விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை காவல்காரன் படம் முடிந்ததும் தொடங்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படத்துக்காக விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் தோன்றவிருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Blogger இயக்குவது.