இங்கிலாந்து ரேஸ்; 18வது இடம் பிடித்தார் அஜீத்!

சில்வர்ஸ்டோன்: இங்கிலாந்தில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமார் கடுமையாகப் போராடி 18வது இடம் பிடித்தார்.


இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடந்த பார்முலா 2 பந்தயத்தில் பங்கேற்ற அஜீத், ஆரம்ப கட்டப் போட்டிகளில் கடைசி இடத்திலேயே வந்தார். மொத்தம் 23 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அஜீத் 22 வது இடத்திலிருந்தார் நேற்று முன்தினம் வரை. நேற்று நடந்த போட்டியில் அவர் 18வது இடத்தைப் பிடித்தார்.

அஜீத் பங்கேற்கும் முதல் பார்முலா 2 பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அஜீத் கூறுகையில், "இந்தப் போட்டியைப் பொறுத்தவரை வெற்றி முக்கியமல்ல.. பங்கேற்புதான் முக்கியம். முதல்முறையாக நான் பங்கேற்று 18 வது இடத்தைப் பிடித்துள்ளேன். முதல் போட்டியில் இதுவே பெரிய விஷயம்தான். அடுத்த போட்டியில் இன்னும் போட்டியை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

அவருடன் பங்கேற்ற பிற இந்திய வீரர்களான இப்ராகிம் 8வது இடம் பிடித்தார். சுரேஷ்வரனுக்கு 16வது இடம் கிடைத்தது.
Blogger இயக்குவது.