விண்ணைத் தாண்டி வருவாயா குழுவுக்கு ரஜினி பாராட்டு

விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரஜினிக்காக சிறப்புக் காட்சி போட்டிருக்கிறார்கள். படம் பார்த்த ரஜினி, படக்குழுவினர், நடிகர் நடிகைகள் எல்லோராயும் வாயார வாழ்த்தியுள்ளார்.
பின்னர் மறக்காமல் கேட்டது படத்தில் ‘காக்க காக்க கேமராமேன்’ பாத்திரத்தில் வரும் கணேஷை. ‘எங்கே அந்த காக்க காக்க கேமராமேன்… கூப்பிடுங்க அவரை…” என்றாராம். உண்மையில் காக்க காக்க படத்துக்கு கேமராமேன் ஆர்டி ராஜசேகர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக கணேஷுக்கு அப்படி ஒரு வேடம் கொடுத்ததை ரஜினிக்கு சொல்ல, ‘அட… பிரமாதம்பா… நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..” என்று வாயாற பாராட்டினாராம்!
இதுபற்றி இயக்குநர் கவுதம் மேனன் கூறுகையில், “கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்… இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமா விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்” என்றார்.
Blogger இயக்குவது.