அஜீத் – கவுதம் மேனன் புதிய படம் ‘துப்பறியும் ஆனந்த்’


அஜீத் – கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.
இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.
படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
Blogger இயக்குவது.