சர்வதேச கார் பந்தயம் : நடிகர் அஜீத் பங்கேற்பு

எம்.ஆர்.எப். சர்வதேச கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் 3-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்தது.முதல் போட்டியாக 115 சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடந்தது.
அதைத் தொடர்ந்து எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயம் நடந்தது.

இதில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கார்பந்தயத்தில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

பந்தயம் 15 ரவுண்டுகளை கொண்டது. ஆனால் அஜீத்குமார் சென்ற கார் முதல் ரவுண்டிலேயே பழுதாகி நின்று விட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத் துடன் கூச்சல் போட்டனர்.

அந்த பந்தயம் முடிந்தபிறகு அஜீத் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் ? மணி நேரம் போட்டி நடைபெறுவது பாதிக்கப்பட்டது.

மாலையில் நடைபெறும் எம்.ஆர்.எப். பார்முலா 1600 பந்தயத்தில் (15 ரவுண்டு) கலந்து கொள்ளப் போவதாக அஜீத்குமார் அறிவித்தார்.

காலையில் நடந்த எம்.ஆர்.எப். பார்முலா 1600 கார் பந்தயத்தில் சென்னை வீரர் அஸ்வின் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த உட்டன் 2-வது இடத்தையும், பார்த்திவா கமரஸ்வரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.


Blogger இயக்குவது.