நிருபர்கள் ஆவேசம் விவேக் ஓட்டம்

பல் இளித்துப் போயிருக்கிறது விவேக்கின் வீரம். எனக்கு எவன் தயவும் தேவையில்லை. நடிகர் சங்கமும், மக்களும் இருக்காங்க. அது போதும். என்று ஆவேசமாக பேசியதோடல்லாமல் நிருபர்களின் குடும்பத்து பெண்களையும் ஏடாகூடமாக ஏசியிருந்தார்.

அவரது இப்போதைய ஸ்டேஜ் உரலுக்குள் விரலே மாட்டிக் கொண்ட மாதிரிதான்!

இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் மகனே என் மருமகனே படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜ் டி.வி தயாரிக்கும் படம் என்பதாலும், இப்படத்தை இயக்கியிருப்பது டி.பி.கஜேந்திரன் என்பதாலும் இந்த பிரஸ்மீட்டுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வந்திருந்தார்கள் நிருபர்கள். ஆனால் ஒரு கண்டிஷனோடு... இந்த நிகழ்ச்சிக்கு விவேக் வரக்கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். ஆனால் பிரஸ்மீட் நடந்து கொண்டிருக்கும் போதே விவேக் வெளியே காத்திருப்பதாகவும், நீங்கள் அனுமதித்தால் அவரை உள்ளே அழைப்பதாகவும் தெரிவித்தார் டி.பி.கஜேந்திரன். இதையடுத்து நிருபர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாங்கள் வந்ததே உங்களை மதித்துதான். அவர் வருவதாக கூறியிருந்தால் நாங்கள் வந்தே இருக்க மாட்டோம் என்று நிருபர்கள் கூற, அவர் உள்ளே வந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக கூறினார் கஜேந்திரன்.

இது வேறு நிகழ்ச்சி. அவரது பிரச்சனை வேறு. இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிருபர்கள் பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார்கள். இதையடுத்து விவேக்கை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்தால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.
Blogger இயக்குவது.