மேகத்தில் ஒன்றாய் பாடல்வரிகள்

 

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
(மேகத்தில் ...)
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
(மேகத்தில்..)
கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை ஜொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்

மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன்
நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலை காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்
கண்ணா சிலநாள் தெரிவோம் அதனால்
உறவா சேர்த்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்
மடலா வற்றி விடும்
கிளியோ போகும் காற்றும் ஒரு நாள்
வீட்டுக்கு திரும்பி வரும்
பிரித்தால் என்பது இளையுதிர் காலம்
நிச்சயம் பசுமை வரும்
(மேகத்தில்..)

Kadhal Sadugudu - Megathil Ondrai Nindrom
Blogger இயக்குவது.